உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டேங்கர் லாரிகளால் சேதமான சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

டேங்கர் லாரிகளால் சேதமான சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

திருப்போரூர்:இள்ளலுாரில், டேங்கர் லாரிகளால் சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் -- இள்ளலுார் சாலை வழியாக நெல்லிக்குப்பம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு, கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக, இள்ளலுார் அருகே உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களில் இருந்தும், விவசாய கிணறுகளில் இருந்தும் தண்ணீர் எடுத்துச் செல்லும் டேங்கர் லாரிகள், தண்ணீர் கேன் ஏற்றிச் செல்லும் லோடு வாகனங்கள் அதிகமாக இச்சாலையை பயன்படுத்தி வருகின்றன. இந்த வாகனங்களால், தார்ச்சாலை பெயர்ந்து சேதமடைந்து வருகிறது. இதனால், சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளன. இச்சாலையில் சென்று வரும் இருசக்கர வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். அதேபோல், செங்காடு சாலை சந்திப்பு பகுதியிலும் சாலை சேதமடைந்து உள்ளது. எனவே, சேதமடைந்து உள்ள சாலைகளை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை