உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கடும் சேதமான நென்மேலி சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

கடும் சேதமான நென்மேலி சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

நென்மேலி:கடுமையாக சேதமடைந்துள்ள நென்மேலி சாய் லஷ்மி நகர் சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.செங்கல்பட்டு அடுத்த நென்மேலி ஊராட்சி, சாய் லஷ்மி நகரில், 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நகரில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தார்ச்சாலை சேதமடைந்து, போக்குவரத்துக்கு பயனற்ற சாலையாக மாறியுள்ளது. இதனால், இவ்வழியாக பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் அத்தியாவசிய பணிக்குச் செல்வோர் சிரமப்படுகின்றனர். சாலையில் ஆங்காங்கே பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளதால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து, விபத்துகளில் சிக்குகின்றனர். இச்சாலையை சீரமைக்க, திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கலெக்டர் ஆகியோரிடம், இப்பகுதி மக்கள் தொடர்ந்து மனு அளித்து வருகின்றனர். ஆனால், இம்மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்பகுதியில், பெரிய விபத்துகள் நடப்பதற்குள், படுமோசமான நிலையிலுள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !