மேலும் செய்திகள்
திருமுக்கூடல் சாலையில் பள்ளம் சீரமைக்க கோரிக்கை
23-Oct-2025
திருப்போரூர்: சேதமான சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் மழைநீர் தேங்கி உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். திருப்போரூர் ஒன்றியத்தில், திருப்போரூர் -செங்கல்பட்டு சாலையில் இருந்து கொட்டமேடு --மானாமதி சாலை பிரிந்து செல்கிறது. இச்சாலை இடையே மைலை, எடர்குன்றம், பூண்டி, ராயமங்கலம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. சுற்றுவட்டார கிராம மக்கள் கூடுவாஞ்சேரி, தாம்பரம், திருக்கழுக்குன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு சென்று வர இச்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மைலை சாலை சேதமடைந்து பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. சேதமான சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. சாலை பள்ளத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் மழையின் போது சாலையில் பல இடங்களில் குட்டைபோல் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் நடந்து செல்பவர்கள், வாகனத்தில் செல்பவர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, சேதமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
23-Oct-2025