சோத்துப்பாக்கத்தில் மயானம் கேட்டு இஸ்லாமியர் அமைதி போராட்டம்
மேல்மருவத்துார்:செய்யூர் வட்டம், சோத்துப்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட திரு.வி.க., நகர் பகுதியில், 400க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் வசிக்கின்றனர்.கடந்த 80 ஆண்டுகளாக, மயானம் இல்லாத காரணத்தால், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய, 10 கி.மீ., வரை, பல ஊர்களுக்கு உடலை எடுத்து சென்று அடக்கம் செய்யும் அவல நிலை உள்ளது.அதனால், மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, சோத்துப்பாக்கத்தில் நேற்று அமைதி போராட்டம் நடந்தது.இதுறித்து அப்பகுதி இஸ்லாமியர்கள் கூறியதாவது:தமிழக அரசிடம் முறையாக மனு கொடுத்து, சோத்துப்பாக்கம் கிராமத்தில், சர்வே எண்: 123ல், மயானத்திற்கு இடம் வழங்கப்பட்டது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, அந்த இடத்தை சர்வே செய்து, மயானத்திற்கான பொது வழி அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை.கலெக்டர் உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், இது வரை நடவடிக்கை இல்லை. பொது வழியில் சாலை அமைப்பதற்கும், போர்வெல், சுற்றுச்சுவர், சோலார் மின் இணைப்பு ஆகியவற்றையும், ஏற்பாடு செய்த தர வேண்டும்.இல்லையேல், 400க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களின் ஆவணங்களான ஆதார், ரேஷன், வாக்களர் அட்டை உள்ளிட்டவற்றைதிரும்ப பெற்றுக் கொள்ளுங்கள்.இவ்வாறு அவர்கள் கூறினர்.