உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மர்மமான முறையில் பைக் எரிந்து நாசம்

மர்மமான முறையில் பைக் எரிந்து நாசம்

பெரும்பாக்கம்:சென்னை, பெரும்பாக்கம், குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்பு, 134வது பிளாக்கை சேர்ந்தவர் ஜான், 53. பாதிரியார். இவர் தனது வீட்டில் ஆராதணைக் கூடம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, தனது பைக்கை வெளியே நிறுத்தியிருந்தார். நள்ளிரவில் திடீரென பைக் தீப்பற்றி எரிந்தது. குடியிருப்பு வாசிகள் போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் பைக் முழுதும் எரிந்து நாசமானது.இது குறித்து, காவல் நிலையத்தில் ஜான் புகார் அளித்தார். போலீசார் நேரில் விசாரித்த போது, எரிந்த பைக்கின் அருகில் இரண்டு கத்திகள் காணப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை