மேலும் செய்திகள்
செங்கையில் 20ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்
18-Dec-2024
செங்கல்பட்டு:செங்கல்பட்டில், பிரதம மந்திரி தேசிய தொழில்பழகுனர் முகாம், வரும் 20ம் தேதி நடக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:மத்திய மாநில அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு, பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுனர் முகாம், செங்கல்பட்டு தொழிற்பயிற்சி நிலையத்தில், வரும் 20ம் தேதி காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடக்கிறது.இம்முகாமில், தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று, தேர்வில் தேர்ச்சி பெற்ற, பல்வேறு தொழிற்பிரிவைச் சார்ந்த பயிற்சியாளர்கள் பங்கேற்று, தொழிற்பழகுனர் பயிற்சியில் இணைந்து, மத்திய அரசின் சான்றிதழ் பெற்று பயனடையலாம்.மேலும் விவரங்களுக்கு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், மொபைல் எண் 6379090205- 044- 27426554 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
18-Dec-2024