திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் வரும் 30ல் நவராத்திரி விழா
திருப்போரூர்:செம்பாக்கம் கிராமத்தில் பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவில் வசந்தகால மஹா நவராத்திரி விழா, வரும் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.திருப்போரூர் அடுத்த செம்பாக்கம் கிராமத்தில், பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கடந்த 2016ம் ஆண்டில், 9 அடி மூலிகை அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது.இக்கோவிலில், ஆண்டுதோறும் வசந்த கால நவராத்திரி விழா நடைபெறுவது வழக்கம். அதுபோல, இந்தாண்டிற்கான 15ம் ஆண்டு விழா, வரும் 30ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, ஏப்., 14ம் தேதி நிறைவடைகிறது.விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு பல்வேறு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனைகள் நடைபெறும். அதேபோல் தினமும் மாலையில், அம்மன் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி, உட்பிரகார உலா நடைபெறும். இரவில் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.