உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 3 மாதமாக 100 நாள் வேலை இல்லை நெல்வாய்பாளையம் மக்கள் மறியல்

3 மாதமாக 100 நாள் வேலை இல்லை நெல்வாய்பாளையம் மக்கள் மறியல்

பவுஞ்சூர்:லத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட நெல்வாய்பாளையம் ஊராட்சியில், 1,000த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.லத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட பிற ஊராட்சிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் வேலை நடந்து வருகிறது.இந்நிலையில், நெல்வாய்பாளையம் ஊராட்சியில், கடந்த மூன்று மாதங்களாக 100 நாள் வேலை வழங்காததால், 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை 11:00 மணிக்கு, மதுராந்தகம் - கூவத்துார் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, சம்பவ இடத்திற்கு வந்த லத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் கவுரி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினார்.அப்போது அவர் கூறியதாவது:நெல்வாய்பாளையம் ஊராட்சியில் ஐந்து பண்ணைக் குட்டைகள் அமைக்க பணி ஒதுக்கீடு செய்து, மூன்று பண்ணைக் குட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.மீதம் உள்ள இரண்டு பண்ணைக் குட்டைகள் அமைக்க, கடந்த மாதம் இடம் தேர்வு செய்து, பணியை துவங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.வார்டு உறுப்பினர்கள் மற்றும் பணிதள பொறுப்பாளர்களின் அலட்சியத்தால், பல நாட்களாக பணி துவங்கப்படாமல் இருந்ததால், பண்ணைக் குட்டை அமைக்கும் பணி ரத்து செய்யப்பட்டது.ஆகையால், அடுத்த சில நாட்களில், மீண்டும் பண்ணைக் குட்டை அமைக்கும் பணி அல்லது கால்வாய் சீரமைக்கும் பணிக்கான ஆணை தயார் செய்து, விரைவில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.அதனால், போராட்டத்தில் ஈடுபட்டோர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை