உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பூயிலுப்பையில் ரூ.14 லட்சத்தில் புது அங்கன்வாடி கட்டடம்

பூயிலுப்பையில் ரூ.14 லட்சத்தில் புது அங்கன்வாடி கட்டடம்

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த பூயிலுப்பை கிராமத்தில், அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இதில் 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஆரம்ப கல்வி பயில்கின்றனர். இம்மையத்திற்கு சொந்த கட்டடம் இல்லாமல், வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. இதனால், போதிய வசதி இல்லாமல் குழந்தைகள், பணியாளர்கள் சிரமப்பட்டு வந்தனர்.இந்நிலையில், புதிய கட்டடம் வேண்டும் என, கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்று, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 14 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், புதிய கட்டடம் கட்டப்பட்டது. இந்த கட்டடம், தற்போது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது.மேலும், குழந்தைகளை கவரும் வகையில், கட்டடத்தில் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டு உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !