160 அங்கன்வாடிக்கு புது கட்டடம் 6 மாதத்தில் பணியை முடிக்க திட்டம்
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், 160 அங்கன்வாடி மையங்களுக்கு, புதிய கட்டடம் கட்ட 25.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டுள்ளன. 6 மாதங்களில் இப்பணிகளை முடித்து ஒப்படைக்க வேண்டும் என, ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில் அச்சிறுபாக்கம், மதுராந்தகம், சித்தாமூர், லத்துார், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், காட்டாங்கொளத்துார், புனிததோமையார்மலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.இந்த ஊராட்சிகளில், 1,266 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. மாவட்டத்தில், எட்டு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகங்களின் கீழ், 1,169 முதன்மை அங்கன்வாடி மையங்களும், 98 குறு அங்கன்வாடி மையங்களும் செயல்பட்டு வருகின்றன.இதில், பெரும்பாலான அங்கன்வாடி மையங்களின் கட்டடங்கள் பழுதடைந்து இருந்ததால், புதிய கட்டடம் கட்ட, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, பழுதடைந்த கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டவும், வாடகை கட்டடத்தில் இயங்கிய மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டவும் நிர்வாக அனுமதி அளித்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டார்.இதைத்தொடர்ந்து அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடங்கள் கட்ட மத்திய, மாநில அரசுகள் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.செங்கல்பட்டு மாவட்டத்தில் எட்டு ஊராட்சி ஒன்றியங்களில், அரசு மற்றும் தனியார் கட்டடங்களில் 232 அங்கன்வாடி மையங்கள், வாடகை கட்டடத்தில், 88 மையங்கள் என, 320 மையங்கள் இயங்கி வருகின்றன.இதில், 2024-25ம் ஆண்டில், 108 பணிகளும், 2025-26ம் ஆண்டு 52 பணிகள் என, மொத்தம் 160 அங்கன்வாடி மையங்கள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கி, கலெக்டர் உத்தரவிட்டார்.இதில், ஒரு அங்கன்வாடி மைய கட்டடம் கட்ட 16 லட்சம் ரூபாய் என, 160 அங்கன்வாடி மையங்கள் கட்ட, 25 கோடியே 60 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளுக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுமான பணி 2024-25
ஒன்றியம் மையங்கள்அச்சிறுபாக்கம் 14மதுராந்தகம் 16சித்தாமூர் 16லத்துார் 15திருக்கழுக்குன்றம் 21திருப்போரூர் 22காட்டாங்கொளத்துார் 4புனிததோமையார்மலை -மொத்தம் 108...............