உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்சார ரயில்கள் புது அட்டவணை நாளை அமல்

மின்சார ரயில்கள் புது அட்டவணை நாளை அமல்

சென்னை, சென்னை புறநகர் மின்சார ரயில்களின் புதிய கால அட்டவணை, நாளை முதல் அமலாகிறது. இதில், 24 ரயில்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது.தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை, இன்று முதல் அமலாகிறது. இதையடுத்து, சென்னை ரயில்வே கோட்டத்தில் புறநகர் மின்சார ரயில்களின் நேரம் மாற்றப்படுகிறது.அதன்படி, சென்னை சென்ட்ரல் - - திருத்தணி மார்க்கம், சென்னை கடற்கரை - - செங்கல்பட்டு மார்க்கம் உள்ளிட்ட மார்க்கங்களில், குறிப்பிட்ட சில ரயில்களின் நேரம் மாற்றம், ரயில் எண்கள் மாற்றம் செய்யப்பட உள்ளன. இந்த மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. வார நாட்களில் மட்டுமே, இந்த நேர மாற்றம் இருக்கும்.சென்னை சென்ட்ரல் -- திருத்தணி, சென்னை கடற்கரை - - ஆவடி, சென்ட்ரல் -- அரக்கோணம், சென்ட்ரல் -- பட்டாபிராம், திருத்தணி - சென்ட்ரல், கடற்கரை - செங்கல்பட்டு, ஆவடி - சூலுார்பேட்டை வழித்தடத்தில், 24 ரயில்களின் நேரத்தில், 5 முதல் 10 நிமிடங்கள் வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது என, சென்னை ரயில் கோட்டம் நேற்று தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை