உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்தி எதிரொலி மறைமலை நகர் --ஆப்பூர் சாலை மண் கொட்டி சீரமைப்பு

செய்தி எதிரொலி மறைமலை நகர் --ஆப்பூர் சாலை மண் கொட்டி சீரமைப்பு

மறைமலை நகர்:மறைமலை நகர் - - ஆப்பூர் சாலை 7 கி. மீ., தூரம் உடையது. இந்த சாலையை சட்டமங்கலம்,பனங்கொட்டூர், திருக்கச்சூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை சிங்கபெருமாள் கோவில்- ஸ்ரீ பெரும்புதூர் சாலையின் இணைப்பு சாலை. தினமும், ஆயிரக்கணக்கான இரு சக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள் தனியார் தொழிற்சாலை பேருந்துகள் சென்று வருகின்றன.மறைமலைநகர், காட்டாங்கொளத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஒரகடம் பகுதிக்கு வேலைக்கு செல்வோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த சாலையில் ஆப்பூர் தாலிமங்கலம் இடையே 200 மீட்டர் தூரம் இருபுறமும் காப்புகாடுகள் உள்ளன. இங்கு சாலை குறுகலாகவும் சாலை ஓரம் அதிக அளவில் பள்ளங்கள் இருந்ததால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவசர காலங்களில் வாகனங்கள் செல்ல முடியாமல் இருந்து வந்தது.மேலும் அடிக்கடி வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வந்தனர். இது குறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, நேற்று காலை இந்த சாலை ஓரம் இருந்த பள்ளங்கள் மண் கொட்டி சீரமைக்கும் பணி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ