சென்னை:''விதிகளை மீறும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hmo35jd9&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும், சென்னை புறவழிச் சாலையில் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களைத் தவிர, வேறு எந்த இடத்திலும் பயணியரை ஏற்றி, இறக்கக் கூடாது என, சென்னை உயர் நீதிமன்றத்தில், கடந்த 9ம் தேதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இந்த உத்தரவை எதிர்த்தும், போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த இரு ஆணைகளை எதிர்த்தும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.இதன்படி, சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் எக்காரணம் கொண்டும், சென்னை புறவழிச்சாலையில் போரூர் சுங்கச்சாவடி, சூரப்பட்டு சுங்கச்சாவடி, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களைத் தவிர, வேறு எங்கும் பயணியரை ஏற்றி, இறக்கக் கூடாது என அறிவிக்கப்படுகிறது. தெற்கு நோக்கிச் செல்லும் ஆம்னி பேருந்துகள் இதை மீறி, மேற்கூறிய மூன்று இடங்களைத் தவிர, வேறு இடங்களில் பயணியரை ஏற்றி, இறக்குவது கண்டறியப்பட்டால், தொடர்புடைய ஆம்னி பேருந்துகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.தங்களது பயணச்சீட்டு முன்பதிவு மென்பொருளிலும், ரெட் பேருந்து, அபி பேருந்து உள்ளிட்ட செயலிகளிலும், பொதுமக்களை குழப்பும் வகையில் பதிவிடக் கூடாது.அவ்வாறு பதிவு செய்தால், தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும்.இதை மீறி செயல்படும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு, ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.