மேலும் செய்திகள்
மாநகர பஸ் நடத்துனர் ரயில் மோதி பலி
21-Jun-2025
மறைமலை நகர்:திருப்பூர் மாவட்டம், கனியாம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 50. மறைமலை நகரில் வாடகை வீட்டில் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் ராஜேஷ், தன் 'ராயல் என்பீல்டு' இருசக்கர வாகனத்தில், மறைமலை நகரில் இருந்து ஜி.எஸ்.டி., சாலையில், தாம்பரம் நோக்கிச் சென்றார்.மறைமலை நகர் பேருந்து நிறுத்தம் அருகில் சென்ற போது, சாலை மைய தடுப்பு சுவரில் இருசக்கர வாகனம் மோதி, நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் ராஜேஷுக்கு பின்பக்க தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், அவரது உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
21-Jun-2025