உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டூ-வீலரில் கார் மோதி அச்சிறுபாக்கத்தில் ஒருவர் பலி

டூ-வீலரில் கார் மோதி அச்சிறுபாக்கத்தில் ஒருவர் பலி

அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது, கார் மோதிய விபத்தில், ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அடுத்த பள்ளிப்பேட்டை ஊராட்சி, புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். 50.இவர், நேற்று முன்தினம் இரவு, தன் மகன் திருமணத்திற்காக, அச்சிறுபாக்கம் பகுதியில் உள்ள உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.பின், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், 'ஹோண்டா ஆக்டிவா' இருசக்கர வாகனத்தில், அச்சிறுபாக்கம் மார்வர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பகுதியில், சாலையைக் கடந்துள்ளார்.அப்போது, திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற 'மாருதி எர்டிகா' கார், எதிர்பாராத விதமாக செல்வராஜ் மீது மோதியது.இதில் துாக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அச்சிறுபாக்கம் போலீசார், செல்வராஜின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின், விபத்து ஏற்படுத்திய காரை பறிமுதல் செய்தனர். விபத்து ஏற்படுத்தி விட்டு தலைமறைவான கார் ஓட்டுநரை, அச்சிறுபாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை