மேலும் செய்திகள்
செங்கையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து
3 minutes ago
திருப்போரூர்: திருப்போரூர்- - இள்ளலுார் சாலையில், பைக் மீது கார் மோதிய விபத்தில், ஒருவர் படுகாயமடைந்தார். திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலையிலிருந்து, இள்ளலுார் சாலை பிரிந்து செல்கிறது. திருப்போரூர் - இள்ளலுார் சாலை சமீபத்தில் அகலப்படுத்தப்பட்டது. செங்காடு, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்கனவே இருந்த வேகத்தடைகள் அகற்றப்பட்டன. இதனால், அச்சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்கின்றன. இந்நிலையில் நேற்று, மேற்கண்ட சாலையில் பைக்கில் பயணித்த ஒருவர் மீது, எதிரே வந்த கார் மோதியது. இதில், அவரது இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு, படுகாயமடைந்தார். இதுகுறித்து, திருப்போரூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
3 minutes ago