மேலும் செய்திகள்
செங்கையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து
3 minutes ago
பைக் மீது மோதிய கார் ஒருவர் படுகாயம்
3 minutes ago
திருப்போரூர்: ஓபன் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில், செங்கை மாவட்ட வீரர்கள் 41 தங்க பதக்கம், எட்டு வெள்ளி பதக்கங்களுடன் 'ஓவரால் சாம்பியன்' கோப்பையை வென்று அசத்தினர். புதுச்சேரியில், மிஷன் ஒலிம்பிக் கேம்ஸ் அசோசியேஷன் இந்தியா சார்பில், ஓபன் சர்வதேச சாம்பியன்ஷிப் -2025 போட்டிகள், நேற்று முன்தினம் நடந்தன. சிலம்பம், யோகா, கராத்தே ஆகிய போட்டிகளில் நாடு முழுதும் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதன் ஒரு பகுதியாக நடந்த சிலம்பம் போட்டியில், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம், ஸ்ரீ வீர ஆஞ்நேயர் சிலம்பம் பயிற்சி மையம் சார்பில், குமரேசன் தலைமையில் அவரின் மாணவர்களான 28 வீரர் -- வீராங்கனையர் பங்கேற்றனர். சிலம்பத்தில் ஒன்றை கம்பு, இரட்டை கம்பு, வால் வீச்சு, மான் கொம்பு உள்ளிட்ட பிரிவு போட்டிகளில் பங்கேற்ற வீரர்- வீராங்கனையர் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். மேற்கண்ட அனைத்து பிரிவுகளிலும் பங்கேற்ற 28 வீரர் -- வீராங்கனையர் 41 தங்கப்பதக்கம், 8 வெள்ளிப்பதக்கம் வென்றனர். போட்டியின் முடிவில், சர்வதேச அளவில், செங்கல்பட்டு மாவட்ட வீரர் - வீராங்கனையர், தங்களது அசத்தலான ஆட்டத்தால், அதிக புள்ளிகளை வென்று,'ஓவரால் சாம்பியன்' கோப்பையை கைப்பற்றினர்.
3 minutes ago
3 minutes ago