அறநிலைய துறை ஆய்வாளர் அலுவலகம் திறப்பு
அச்சிறுபாக்கம், அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான இடத்தில், புதிதாக கட்டப்பட்ட அறநிலையத்துறை ஆய்வாளர் அலுவலகத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக திறந்து வைத்தார். அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்குச் சொந்தமான நிலம், சென்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையின் புறவழிச் சாலையில் உள்ளது. தற்போது, 4.5 ஏக்கர் காலியாக உள்ள இவ்விடத்தில், வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இங்கு, அறநிலையத் துறை ஆய்வாளர் அலுவலகம், 2023 -- 24ம் நிதியாண்டில், 12 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு, கடந்த ஓராண்டாக பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் பூட்டிக் கிடந்தது. இந்நிலையில் நேற்று, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலமாக திறந்து வைத்தார். அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் தமிழரசி, அச்சிறுபாக்கம் ஒன்றிய குழு தலைவர் கண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சீனுவாசன் மற்றும் அறநிலையத்துறை ஆய்வாளர், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.