உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' சிறப்பு திட்ட முகாமில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி பெண்கள், மனு அளித்தனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், உங்களுடன் ஸ்டாலின் எனும் சிறப்புத் திட்டத்தின் கீழ், நகர்ப்புற பகுதிகளில் 108 முகாம்கள், ஊரக பகுதிகளில் 243 முகாம்கள் உள்ளிட்ட மொத்தம் 349 முகாம்கள் நடக்க உள்ளன. மாவட்டத்தில் முதற்கட்டமாக, நகர்ப்புற பகுதிகளில் 32 முகாம்கள், ஊரக பகுதிகளில் 69 முகாம்கள் என, 121 முகாம்கள், கடந்த 15ம் தேதி துவங்கி, வரும் ஆக., 14ம் தேதி வரை நடக்கின்றன.இதைத்தொடர்ந்து, திருக்கழுக்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில், நெய்குப்பி ஊராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்டம் முகாம், நேற்று நடந்தது. இந்த முகாமை, கலெக்டர் சினேகா ஆய்வு செய்து, மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கீழக்கண்டையில் முகாம்

கீழக்கண்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று, மதுராந்தகம் கோட்டாட்சியர் ரம்யா தலைமையில் நடந்தது. இதில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை, கூட்டுறவு உள்ளிட்ட 15 துறைகள் வாயிலாக, 46 சேவைகள் வழங்கப்பட்டன.வீட்டுமனைப் பட்டா, மகளிர் உரிமைத்தொகை, தொகுப்பு வீடு, குடும்ப அட்டை என, பல்வேறு கோரிக்கைகளை பொதுமக்கள் மனுவாக, துறை சார்ந்த அதிகாரிகளிடம் வழங்கினர்.நேற்று நடந்த முகாமில் அதிகபட்சமாக, பட்டா வேண்டி 240, மகளிர் உரிமைத்தொகை வேண்டி 191 உள்ளிட்ட, 610 மனுக்கள் பெறப்பட்டன.https://x.com/dinamalarweb/status/1945654046490267929


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை