உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மோட்டார் பழுதால் பயனற்ற மேல்நிலை குடிநீர் தொட்டி

மோட்டார் பழுதால் பயனற்ற மேல்நிலை குடிநீர் தொட்டி

அச்சிறுபாக்கம்:சிறுதாமூரில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டும், தண்ணீர் ஏற்ற முடியாமல் பயனின்றி காட்சி பொருளாக உள்ளது. அச்சிறுபாக்கம் ஒன்றியம், சிறுதாமூர் ஊராட்சிக்குட்பட்ட அம்பேத்கர் நகர், நடுத்தெரு பகுதியில் 250க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, 15வது மத்திய நிதி குழு மானியத்தின் கீழ் 2020 - -2021ல், 12 லட்சம் ரூபாய் செலவில் 30,000 லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு சிறுதாமூர் ஏரியில் உள்ள கிணற்றில் இருந்து, மின் மோட்டார் வாயிலாக, நீரேற்றி சோதனை செய்யப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட குடிநீர் பைப் பழுதாகி உள்ளதால், நீர் ஏற்ற முடியாமல் உள்ளது. நீர்த்தேக்க தொட்டிக்கு, குடிநீர் கொண்டு செல்வதற்கு, புதிதாக பிளாஸ்டிக் பைப்கள் புதைக்கப்பட வேண்டும் என , ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் அச்சிறுபாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், நடவடிக்கை மேற்கொள்ளப் படாமல் உள்ளது. ஒன்றிய அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி