மேலும் செய்திகள்
விதிமுறை மீறிய கட்டடங்கள் பல்லடத்தில் அதிகரிப்பு
27-Mar-2025
செங்கல்பட்டு:ஊராட்சிகளில் மனைப்பிரிவு, கட்டடங்களுக்கு அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:செங்கல்பட்டு மாவட்ட, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, கிராம ஊராட்சிகளில் அமைக்கப்படும் மனைப்பிரிவு மற்றும் கட்டப்படும் கட்டடங்கள் ஆகியவற்றுக்கு, அனுமதி பெறுதல் கட்டாயம். கிராம ஊராட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.மனைப் பிரிவுகளுக்கான அனுமதி மற்றும் கட்டட அனுமதி ஆகியவற்றை பொதுமக்கள் எளிதில் பெறும் வகையில், 2023ம் ஆண்டு அக்., 2ம் தேதி முதல் தமிழ்நாடு அரசின் மூலம் ஒற்றை சாளர முறையிலான இணையதளத்தில், ( single window portal), (https://onlineppa.tn.gov.in) தெரிந்து கொள்ளலாம்.இதன்படி, 2,500 சதுர அடி வரையிலான மனைப்பரப்பில், 3,500 சதுர அடி வரையிலான கட்டட பரப்பில் தரை அல்லது தரை, முதல் தளம் கொண்ட குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்கு, உடனடி பதிவின் மூலம் சுய சான்று அனுமதி பெற முடியும்.மேலும் 2,500 - 10,000 சதுர அடிக்குள் மேல் உள்ளவை மற்றும் 10,000 சதுர அடிக்கு மேல் உள்ளவைகளுக்கு முறையே சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி மற்றும் நகர கிராம திட்டமிடல் இயக்குனரகம் வாயிலாக, இனங்களுக்கு ஏற்ப கட்டணங்கள் செலுத்துதல் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
27-Mar-2025