உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நிறுத்தத்தில் நிற்காத அரசு பஸ்கள் காத்திருந்து பயணியர் தவிப்பு

நிறுத்தத்தில் நிற்காத அரசு பஸ்கள் காத்திருந்து பயணியர் தவிப்பு

திருப்போரூர், திருப்போரூர் - - செங்கல்பட்டு சாலையில் மடையத்துார், செம்பாக்கம், கொட்டமேடு, வெங்கூர், கரும்பாக்கம், வளர் குன்றம் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இச்சாலை, 13 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்வழியாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இதே தடம் வழியாக வந்து, அச்சரவாக்கம் உள்ளிட்ட மற்ற தடங்களுக்கும், பேருந்துகள் பிரிந்து செல்கின்றன. மேற்கண்ட தடங்களில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் வாயிலாக, இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ -- மாணவியர் சென்று வருகின்றனர்.ஆனாலும், இத்தடத்தில் கரும்பாக்கம் உள்ளிட்ட பகுதி நிறுத்தங்களில், சில நேரங்களில் அரசு பேருந்துகளை ஓட்டுநர்கள் நிறுத்தாமல் செல்வதால், பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.இதுகுறித்து பயணியர் கூறியதாவது:ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள கல்வி, தொழில் நிறுவனங்களில் வேலைக்குச் செல்ல, காலையில் புறப்பட்டுச் செல்கிறோம். கரும்பாக்கம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் போது, ஓட்டுநர்கள் சிலர் பேருந்தை நிறுத்தாமல் ஓட்டிச் செல்கின்றனர். நேற்றும் இதேபோல, பேருந்துகளை நிறுத்தாமல் சென்றனர். இதனால், பள்ளி மாணவ - மாணவியர் உட்பட, வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அலட்சியம் காட்டாமல், பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நின்று செல்ல, அதிகாரிகள் ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை