உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூரை இல்லாத நிழற்குடை தாம்பரத்தில் பயணியர் அவதி

கூரை இல்லாத நிழற்குடை தாம்பரத்தில் பயணியர் அவதி

தாம்பரம்:தாம்பரத்தில் இருந்து, செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, வண்டலுார், கேளம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள், தாம்பரம் ரயில் நிலைய வளாகத்திற்குள் சென்று, அங்குள்ள நிறுத்தங்களில் நின்று, பயணிகளை ஏற்றி செல்கின்றன.தினம் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். இவற்றை முறையாக பராமரிக்காததால், கூரை பெயர்ந்து, மூன்று நிறுத்தங்களும், வெறும் கம்பிகளோடு நிற்கின்றன.இதனால், மழை, வெயில் காலங்களில், பயணியர் சிரமப்படுகின்றனர். மழை பெய்யும்போது, அவசரத்திற்கு ஒதுங்குவதற்கு கூட இடமின்றி, மழையில் நனைந்தபடியும், வெயிலிலும் அங்கேயே நிற்க வேண்டியுள்ளது.நீண்ட நாட்களாக இப்படி இருப்பது தெரிந்தும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.மழைநீர் பட்டு துருபிடிக்கும் இந்த கம்பிகள், அதிக காற்று அடிக்கும் போது உடைந்து விழுவதற்கும் வாய்ப்புள்ளது.பயணியர் நலலை கருதி, இந்த நிறுத்தங்களில் கூரை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி