மேலும் செய்திகள்
செங்கையில் 33 பேருக்கு மனை பட்டா
27-Sep-2024
செங்கல்பட்டு:செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று சப் - கலெக்டர் நாராயண சர்மா தலைமையில், ஓய்வூதியர் குறைதீர் கூட்டம் நடந்தது.ஓய்வூதிய இயக்க கணக்கு அலுவலர் அருண், மனுக்களை பெற்றுக்கொண்டு, ஏற்கனவே பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பேசினார்.இக்கூட்டத்தில், ஓய்வூதியர்களின் குறைகள் குறித்து பெறப்படும் மனுக்களுக்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து துறை அலுவலர்களுக்கும், சப் - கலெக்டர் உத்தரவிட்டார்.இந்த கூட்டத்தில், மாவட்ட கருவூல அலுவலர் உதயகுமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் - கணக்கு, சசிகலா உட்பட அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.தமிழ்நாடு ஓய்வூதியம் சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜேம்ஸ் பாலகிருஷ்ணன் பேசியதாவது:செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் வரை இயக்கப்படும் மாநகர பேருந்துகளை, கலெக்டர் அலுவலகம் வரை நீட்டிக்க வேண்டும்.அதேபோல, கலெக்டர் அலுவலகத்தில், விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும், சாப்பிடவும், இளைப்பாறவும் தனியாக ஒரு அறை ஒதுக்க வேண்டும்.வயது முதிர்வு காரணமாக, முதியோர் அவதியடைந்து வருகின்றனர். இது தொடர்பாக ஏற்கனவே இரண்டு முறை கலெக்டரிடம் மனு அளித்து உள்ளேன்.தங்கள் கோரிக்கை என் மனதில் உள்ளது. விரைவில் பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என, சப் -கலெக்டர் உறுதியளித்தார்.இவ்வாறு அவர் கூறினார்.
27-Sep-2024