உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மக்கள் நலன்காக்கும் கூட்டம் 257 மனு ஏற்பு

மக்கள் நலன்காக்கும் கூட்டம் 257 மனு ஏற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் நலன்காக்கும் நாள் கூட்டம், கலெக்டர் சினேகா தலைமையில் நேற்று, நடந்தது. இதில், கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் - பரிமளா தேவி, நரேந்திரன், தனித்துணை ஆட்சியர் பவானி, மாவட்ட வழங்கல் அலுவலர் வெங்கடாசலம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். முகாமில், இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், அரசு நிலம் ஆக்கிரமிப்பு, வேலைவாய்ப்பு, ஆதரவற்ற விதை சான்று, மின் அழுத்த குறைபாடு, மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 257 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்டதுறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க, கலெக்டர் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி