நிவாரணம் தர த.வெ.க.,வுக்கு அனுமதி மறுப்பு
தாம்பரம்:பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை பருகியதால் பாதிக்கப்பட்ட பலர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.அவர்களுக்கு பிரட், பிஸ்கட், ரஸ்க் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்க த.வெ.க., கட்சியினர், மருத்துவமனைக்கு நேற்று சென்றனர்.அப்போது மருத்துவமனை நிர்வாகம் மற்றும் காவல் துறையினர், மருத்துவமனை வளாகத்தில் நிவாரண பொருட்களை வழங்க, அவர்களுக்கு அனுமதி மறுத்தனர்.இதனால், போலீசார் மற்றும் த.வெ.க.,வினர் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் த.வெ.க.,வினர் வெளியே வந்து, நிவாரண பொருட்களை வழங்கினர்.