சுவர் விளம்பரம் அழிப்பு பா.ம.க., சார்பில் புகார்
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய மாம்பாக்கம், கொளத்துார், காயார், சின்னகாயார் பகுதிகளில், பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் சார்பில், மே 11ம் தேதி சித்திரை முழு நிலவு இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெறுவதையொட்டி, சுவர் விளம்பரங்கள் வரையப்பட்டன.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கொளத்துார், கயார், சின்னகாயார் உள்ளிட்ட பகுதிகளில் வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களில், மர்ம நபர்கள் கருப்பு தார் ஊற்றி அழித்திருந்தனர்.இதுகுறித்து, காயார் காவல் நிலையத்தில், பா.ம.க., நிர்வாகி காயார் ஸ்ரீதர் புகார் அளித்துள்ளார்.இது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.