மேலும் செய்திகள்
சிங்கபெருமாள் கோவிலில் தலைமறைவு குற்றவாளி கைது
18-Sep-2024
தாம்பரம்:பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், பிரபல ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.கிழக்கு தாம்பரம், ராமகிருஷ்ணா புரத்தை சேர்ந்தவர், ராஜா என்ற சீசிங் ராஜா, 49. செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், விசாரணையில் உள்ள வழக்கில், முறைப்படி அழைப்பானை வழங்கப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜராகாததால் பிடியாணை பிறக்கப்பட்டது. அதன் பிறகும் தொடர்ந்து, தலைமறைவாக இருந்து வருகிறார். நீதிமன்றத்தால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால், ராஜா என்கிற சீசிங் ராஜாவை, தேடப்படும் குற்றவாளியாக செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றம், 2024, ஆக., 20ல் அறிவித்தது.போலீசார் ஒட்டியுள்ள போஸ்டரில், சீசிங் ராஜாவை பற்றி தகவல் தெரிந்தால், சேலையூர் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என, குறிப்பிடப்பட்டுள்ளது.
18-Sep-2024