உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சப் - கலெக்டர் அலுவலக சுவரை மீண்டும் ஆக்கிரமித்த போஸ்டர்கள்

சப் - கலெக்டர் அலுவலக சுவரை மீண்டும் ஆக்கிரமித்த போஸ்டர்கள்

செங்கல்பட்டு, செங்கல்பட்டு சப்- கலெக்டர் அலுவலக வளாக சுற்றுச்சுவரில் உள்ள போஸ்டர்களை அப்புறப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில், செங்கல்பட்டு சப்- கலெக்டர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாக சுற்றுச்சுவரில், அரசியல் கட்சியினர், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பலர் போஸ்டர்கள் ஒட்டி அசுத்தப்படுத்தி வந்தனர். இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், போஸ்டர்களை பார்க்கும்போது, விபத்துக்களில், சிக்கி படுகாயமடைந்தனர்.இந்த விபத்தை தவிர்க்கவும், பொதுமக்களுக்கு தேவையான தகவல் மற்றும் தேசிய தலைவர்கள் படங்கள் ஆகியவற்றை, ஓவியமாக வரைய, பொதுப்பணித்துறைக்கு, அப்போதைய சப் - கலெக்டர் ஜெயசீலன் உத்தரவிட்டார். அதன்பின், சுற்றுச்சுவர்களில், தேசிய தலைவர்கள் படம் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான தேர்தல் தொடர்பான தகவல் உள்ளிட்ட விழிப்புணர்வு குறித்து, எழுதப்பட்டது.இதையடுத்து, போஸ்டர் ஒட்டுவதை நிறுத்தினர். தற்போது, கடந்த சில மாதங்களாக, சப்- கலெக்டர் அலுவலக சுற்றுச்சுவரின் நுழைவாயில் பகுதிகளில், அரசியல் கட்சியினர் போஸ்டர்கள், வர்த்தக நிறுவன விளம்பர போஸ்டர்கள், இறப்பு, பிறந்தநாள் போஸ்டர்கள் ஒட்டும் இடமாக மாறி உள்ளது.இந்த போஸ்டர்கள் ஒட்டியவர்களுக்கு அபராதமும் விதிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.செங்கல்பட்டு சப் - கலெக்டர் அலுவலக வளாக சுற்றுச்சுவரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை