உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கூடுவாஞ்சேரி சுற்று பகுதியில் 10 இடத்தில் இன்று மின் தடை

கூடுவாஞ்சேரி சுற்று பகுதியில் 10 இடத்தில் இன்று மின் தடை

கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த நல்லம்பாக்கம் மின்னுாட்டியில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், மகாலட்சுமி நகர் உட்பட 10 இடங்களில், இன்று மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.கூடுவாஞ்சேரி 33/11 கே.வி., துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட நல்லம்பாக்கம் 11 கே.வி., மின்னுாட்டியில், இன்று அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.இதனால் மகாலட்சுமி நகர், ஜெயந்திர சரஸ்வதி நகர், உதயசூரியன் நகர், ஜெயலட்சுமி நகர், சவுபாக்யா நகர், தேஷ் குடியிருப்பு, சபா குடியிருப்பு, அந்தோணி விங்ஸ் குடியிருப்பு, அய்யப்பன் கோவில் தெரு, அமுதம் காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில், காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை, மின் வினியோகம் தடை செய்யப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை