உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தண்டலம் ஊராட்சியில் பாலர் பஞ்சாயத்து துவக்கம்

தண்டலம் ஊராட்சியில் பாலர் பஞ்சாயத்து துவக்கம்

திருப்போரரூர்:திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில், அரசு அறிவுறுத்தலின்படி, குழந்தைகளுக்கான பாலர் பஞ்சாயத்து உருவாக்கம் மற்றும் துவக்க விழா நடந்தது.ஊராட்சி தலைவர் ஆனந்தன் துவக்கி வைத்தார். மாவட்ட குழந்தைகள் உரிமைக்கான தோழமை கூட்டமைப்பு தலைவர் தேவன்பு பங்கேற்று, பாலர் பஞ்சாயத்து அமைப்பின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து மக்களிடையே எடுத்துரைத்தார்.தொடர்ந்து, தண்டலம் ஊராட்சியில், குழந்தைகளின் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பாலர் பஞ்சாயத்து அமைப்பு உருவாக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.மேலும், இதற்கான பொறுப்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இந்த பொறுப்பாளர்கள் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகளுடன் இணைந்து குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் முறை, பள்ளி இடைநிற்றல், குழந்தைகள் மீதான வன்கொடுமைகள், போதைப்பொருள் பயன்பாடு போன்றவற்றிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும் என எடுத்துரைக்கப்பட்டது.இதில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு தலைவர்கள் தட்சிணாமூர்த்தி, சித்ரா, வசந்தி, பள்ளி தலைமையாசிரியர் மதிச்செல்வன், நீடு அறக்கட்டளை இயக்குனர் ராமச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை