மேலும் செய்திகள்
சம்பா நெல் பயிர்களுக்கு நவ., 15க்குள் காப்பீடு
26-Oct-2025
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், 2025-26ம் ஆண்டு, சிறப்பு பருவத்தில், பயிர்களை காப்பீடு செய்ய, விவசாயிகள் முன்வர வேண்டும். விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள பயிர்கள் இயற்கை இடர்பாடுகளால் சேதமடையும் போது, மகசூல் இழப்பிற்கு ஈடு செய்யும் வகையில், பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு ஏக்கர் நெல்லுக்கு காப்பீடாக, 545 ரூபாயை, வரும் நவ., 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். நிலக்கடலைக்கு ஒரு ஏக்கருக்கு 468 ரூபாயை, வரும் 2026 ஜன., 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். கரும்புக்கு காப்பீட்டுத் தொகையாக, 1,260 ரூபாயை, வரும் 2026 மார்ச் 31ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். காப்பீட்டுத் தொகையை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக செலுத்தி, பதிவு செய்து கொள்ளலாம். அதற்கு தேவையான ஆவணங்கள், நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை ஆகியவை. பதிவு செய்யும் போது, விவசாயிகள் முழு விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
26-Oct-2025