உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பிரதம மந்திரி கவுரவ நிதி திட்ட விவசாயிகள் 31க்குள் நில விபரம் பதிய அறிவுறுத்தல்

பிரதம மந்திரி கவுரவ நிதி திட்ட விவசாயிகள் 31க்குள் நில விபரம் பதிய அறிவுறுத்தல்

செங்கல்பட்டு:பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தில், தகுதியுடைய அனைத்து விவசாயிகளும் பயன் பெற, வரும் 31ம் தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்ட அறிக்கை:பிரதம மந்திரி கவுரவ நிதி திட்டத்தின் கீழ், தகுதியுடைய அனைத்து விவசாயிகள், எவ்வித விடுபாடின்றி பயன் பெறுவதற்கு, செங்கல்பட்டு மாவட்டத்தில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தில், வேளாண்மை இணை இயக்குநர் அலுவலகம், அனைத்து வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்கள் அலுவலகம், தபால் துறையின் கீழ் இயங்கும் 'இந்தியன் போஸ்ட் பேமென்ட் வங்கி' மற்றும் பொது சேவை மையங்களில், வரும் 31ம் தேதி வரை முகாம் நடைபெற உள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், 2,223 விவசாயிகள் வங்கிக் கணக்குகளுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர்.2,603 விவசாயிகள் 'இ.கே.ஒய்.சி.,' செய்யாமலும் உள்ளனர்.இந்த முகாமில், தகுதியுடைய விவசாயிகளின் நிலம் தொடர்பான விபரங்கள், வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பது, 'இ.கே.ஒய்.சி., பதிவேற்றம் போன்ற அனைத்து விதமான 'பி.எம்.கிசான்' முழுமையற்ற விபரங்களை சரி செய்து, விவசாயிகள் பயன் பெறலாம்.மாவட்டத்தில் ஏற்கனவே, பி.எம்.கிசான் 19வது தவணைத் தொகை பெற்று வந்த விவசாயிகளில், 7,143 விவசாயிகள் நில உடைமை பதிவு மேற்கொள்ளவில்லை.இவ்விவசாயிகள் நில உடைமை பதிவு மேற்கொண்டு, 20வது தவணையை தடையின்றி பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை