உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு சிறை

தொடர் திருட்டில் ஈடுபட்டவருக்கு சிறை

மேல்மருவத்துார்:தஞ்சாவூர் மாவட்டம், குடவாசல் அடுத்த பணக்கரை புதுார் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம், 46.இவர், 2023ல், மேல்மருவத்துார் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், பூட்டிய வீடுகளில் இரவு நேரங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதுகுறித்து மதுராந்தகம், மேல்மருவத்துார், சித்தாமூர் போலீசார், சம்பவ இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.இந்நிலையில் நேற்று, குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு, குடவாசல் பகுதியில் தலைமறைவாக இருந்த முருகானந்தத்தை கைது செய்து, அவரிடமிருந்து நகை மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.பின், வழக்கு பதிவு செய்து, மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி