| ADDED : டிச 06, 2025 05:49 AM
செங்கல்பட்டு: டாஸ்மாக் கடைகளில், காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை கைவிடக் கோரி, செங்கல்பட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு டாஸ்மாக் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு மாவட்டம் சார்பில், டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி, மாவட்ட தலைவர் கார்த்திகேயன் தலைமையில், செங்கல் பட்டில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், காலி பாட்டிலை திரும்பபெறும் திட்டத்தை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.