உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின் தடையை கண்டித்து காயரம்பேட்டில் மறியல்

மின் தடையை கண்டித்து காயரம்பேட்டில் மறியல்

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், இரண்டு நாட்களாக தொடர் மின் தடை ஏற்பட்டது.இதனால், அப்பகுதி வாசிகள் 50க்கும் மேற்பட்டோர், காயரம்பேடு, அம்பேத்கர் சிலை அருகே, நேற்று மாலை சாலையில் அமர்ந்து, திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக புகாரின்படி விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போலீசார், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினர்.மேலும், 'விரைவில் மின் வினியோகம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் தெரிவித்தனர். அதன்பின், போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி