உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பேரூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

பேரூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருப்போரூர், தி.மு.க., காஞ்சி வடக்கு மாவட்டம், திருப்போரூர் பேரூர் சார்பில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா, நேற்று முன்தினம் நடந்தது.இதில், திருப்போரூர் பேரூராட்சி தலைவரும், பேரூர் செயலருமான தேவராஜ் தலைமை வகித்தார்.சிறப்பு அழைப்பாளராக துணை பொதுச்செயலர் மதிவதனி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.கூட்டத்தில், திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலர், ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன் உட்பட பலர் பங்கேற்றனர்.பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர் பாலு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ