உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூ.5.25 லட்சத்தில் பொது சுகாதார வளாகம்

ரூ.5.25 லட்சத்தில் பொது சுகாதார வளாகம்

செய்யூர், செய்யூர் அடுத்த சித்தார்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பாளையூர் காலனியில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு, சுகாதார வளாகம் இல்லாத காரணத்தால், தங்களது வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாத மக்கள் இயற்கை உபாதைகளை கழிக்க கடும் சிரமப்பட்டு வந்தனர்.சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக இப்பகுதிமக்கள் வேண்டுகோள் விடுத்து வந்த நிலையில், சித்தார்காடு ஊராட்சி சார்பாக 5.25 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆண், பெண் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு என, தனித்தனியே கழிப்பறைகள், கடந்த மாதம் கட்டி முடிக்கப்பட்டது.கட்டிமுடிக்கப்பட்ட சுகாதார வளாகங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை