உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொது பெண் பாலியல் பலாத்காரம் ஒப்பந்த ஊழியர் கைது

பொது பெண் பாலியல் பலாத்காரம் ஒப்பந்த ஊழியர் கைது

சதுரங்கப்பட்டினம்:கூவத்துார் அடுத்த, வடபட்டினத்தைச் சேர்ந்தவர் ராஜா, 35. அணுசக்தி துறை அணுபுரம் நகரியத்தில், துாய்மைப் பணி ஒப்பந்த நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்தார்.இவர், துாய்மைப் பணியாளர்களாக பணிபுரியும் பெண்களிடம், பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார்.கடந்த 1ம் தேதி, துாய்மைப் பணி மேற்கொள்ளும் பெண் ஒருவரை மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுகுறித்து பிறரிடம் கூறக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார்.மீண்டும் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படும் நிலையில், சதுரங்கப்பட்டினம் போலீசில் அப்பெண் புகார் அளித்தார்.இதையடுத்து, போலீசார் ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை