உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எல்லையில் சாலை அமைக்கும் விவகாரம் புதுப்பட்டினம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

எல்லையில் சாலை அமைக்கும் விவகாரம் புதுப்பட்டினம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

புதுப்பட்டினம்,:புதுப்பட்டினம் குப்பம், உய்யாலிகுப்பம் ஆகிய மீனவ பகுதிகளின் எல்லையை அளவிட்டு வரையறுக்கக் கோரி, புதுப்பட்டினம் மீனவர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சி மீனவ பகுதி மற்றும் வாயலுார் ஊராட்சி உய்யாலிகுப்பம் மீனவ பகுதி ஆகிய இடங்கள், அடுத்தடுத்து உள்ளன.புதுப்பட்டினம் தெருவில், ஒன்றியக்குழு பொதுநிதியில், கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது. அத்தெருவை ஒட்டி, உய்யாலிகுப்பம் நோக்கி நீளும் சாலையிலும் நீட்டித்து, சாலை அமைக்க முயன்றபோது, உய்யாலிகுப்பம் மீனவர்கள், அந்த சாலை தங்கள் பகுதிக்குரியது என கூறி, சாலை அமைக்கவிடாமல் தடுத்தனர்.இதுதொடர்பாக, இரண்டு தரப்பினரிடமும் சப் - கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்த, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், உய்யாலிகுப்பம் மீனவர்களை கண்டித்து, புதுப்பட்டினம் மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:புதுப்பட்டினம் பகுதி தெருவில், 300 மீ., சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு, 230 மீ., சாலையும் அமைக்கப்பட்டது. எஞ்சியுள்ள 70 மீ., சாலையை அமைக்க முயன்றால், உய்யாலிகுப்பம் மீனவர்கள் தடுக்கின்றனர்.தவறான ஆவணங்களால், தங்கள் பகுதியாக சொந்தம் கொண்டாடுகின்றனர். அவர்கள் சாலை அமைக்கவிடாமல் தடுக்கும் பகுதி, எங்கள் பகுதி தான்.டிவி, பத்திரிகையில், எங்களை பற்றி, தவறாக பேட்டி அளிக்கின்றனர். அவர்களை கண்டிக்கிறோம். எல்லைப் பகுதியை அதிகாரிகள் விரைந்து அளந்து, வரையறுக்க வலியுறுத்துகிறோம்.அளந்து, அவர்கள் பகுதியாக இருந்தால், சாலை அமைப்பதை கைவிடுவோம். எங்கள் பகுதியாக இருந்தால், சாலை அமைக்கிறோம். இதற்கான தீர்வு, அதிகாரிகளிடம் தான் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.எல்லைப் பகுதி விவகாரம் நீடிப்பதால், தீபாவளி பண்டிகை வரும் நிலையில், இரண்டு பகுதியினருமே மீன்பிடி தொழிலை, சில நாட்களாக தவிர்த்து, வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை