உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நுாறு நாள் வேலை வழங்க வலியுறுத்தி புலிப்பாக்கம் ஊராட்சி ஆபீஸ் முற்றுகை

நுாறு நாள் வேலை வழங்க வலியுறுத்தி புலிப்பாக்கம் ஊராட்சி ஆபீஸ் முற்றுகை

செங்கல்பட்டு:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், புலிப்பாக்கம் ஊராட்சியில், 1,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 600க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் வேலை பார்த்து வந்தனர்.இவர்கள், மரம் நடுதல், பண்ணை குட்டை எடுத்தல் போன்ற வேலைகள் செய்து வந்தனர்.இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் இவர்கள் வேலை பார்த்து வந்தபோது, தொல்லியல் துறை அதிகாரிகள், வேலைகளை தடுத்து நிறுத்தி சென்றனர். கிராமத்தில் பெரும்பாலான இடங்கள் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால், இதுவரை மீண்டும் நுாறு நாள் வேலை வழங்கப்படாமல் உள்ளது.இந்நிலையில், புலிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 60க்கும் மேற்பட்ட பெண்கள், நேற்று காலை மீண்டும் வேலை வழங்க வேண்டும் எனக்கூறி, புலிப்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.தகலவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார், கிராம பெண்களிடம் பேச்சு நடத்தியதையடுத்து, அவர்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ