உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  தண்டவாளத்தில் விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே போலீஸ்

 தண்டவாளத்தில் விழுந்த பெண்ணை காப்பாற்றிய ரயில்வே போலீஸ்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், தண்டவாளத்தில் விழுந்த பெண்ணை, ரயில்வே போலீஸ்காரர் காப்பாற்றினார். விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் பிரமிளா, 38. இவர் நேற்று காலை செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், 6வது நடைமேடையில் இருந்து விழுப்புரம் செல்ல, ரயிலுக்காக காத்திருந்தார். அப்போது ரயில் வந்ததும், நடைமேடையில் இருந்து ரயிலில் ஏற முயன்ற போது, எதிர்பாராத விதமாக தடுமாறி, ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையே விழுந்தார். அப்போது, அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை வீரர் தயாநிதி, உடனடியாக சைகை காட்டி ரயிலை நிறுத்தினார். இதனால், பிரமிளா நுாலிழையில் உயிர் தப்பினார். பின், தண்டவாளத்தில் இறங்கிய தயாநிதி, பிரமிளாவை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார். அங்கு அவர் நலமாக உள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, பல்வேறு தரப்பினரும் ரயில்வே பாதுகாப்பு படை வீரரின் செயலை பாராட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி