செடிகள் சூழ்ந்த மழைநீர் கால்வாய் நெல்வாய்பாளையத்தில் சீரமைப்பு
பவுஞ்சூர், நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, நெல்வாய்பாளையம் ஊராட்சியில் செடிகள் வளர்ந்திருந்த மழைநீர் வடிகால்வாய் சீரமைக்கப்பட்டது. பவுஞ்சூர் அடுத்த நெல்வாய்பாளையம் ஊராட்சியில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கையம்மன் கோவில், மாதாகோவில் தெரு போன்ற பகுதிகளில், மழைநீர் வடிகால்வாய்கள் பராமரிப்பு இன்றி, செடிகள் வளர்ந்திருந்தது. மழைநீர் செல்ல வழியின்றி சாலையில் தேங்கியது. அத்துடன், குடிநீர் குழாய் அருகே தண்ணீர் தேங்கியதால், கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து ஊராட்சி நிர்வாகம், செடிகளை அகற்றி, மழைநீர் வடிகால்வாயை சீரமைத்தது.