சாலை குறுக்கே செல்லும் மழைநீர்: விவசாயிகள் அவதி
திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த பூயிலுப்பை கிராமத்திலிருந்து பழந்தோப்பு பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இச்சாலை, வழியாக அப்பகுதி விவசாயிகள் விவசாய பணிக்கு செல்கின்றனர். கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஒட்டிச் செல்கின்றனர். கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நீரேற்றும் நிலையத்திற்கு பம்ப் ஆப்பரேட்டர்கள் செல்கின்றனர். இச்சாலை குறுக்கே சில மாதங்களுக்கு முன், சிறு பாலம் மட்டும் அமைக்கப்பட்டது. இந்த சிறுபாலத்தில் மழைநீர் வெளியேறும் வகையில் பெரியதாக இல்லாமல் சிறியதாக அமைக்கப்பட்டுள்ளது. முறையான கால்வாய் வசதி இல்லை. சாலை மேம்படுத்தாமல் உள்ளது. இதனால் மழைக்காலங்களில், மழைநீர் சாலையைக் கடந்து செல்வதுடன் தேங்கியும் நிற்கிறது. தேங்கும் மழைநீரில், விவசாயிகள், கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்பவர்கள் என, அனைவரும் தண்ணீரில் அவதிப்பட்டு செல்கின்றனர். எனவே, மழைநீர் வெளியேறும் வகையில், பெரிய, சிறு பாலம், கால்வாய் வசதி, புதிய சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர்.