உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலை, குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்; கார் பார்க்கிங் ஆன ஓ.எம்.ஆர்., சாலை

சாலை, குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர்; கார் பார்க்கிங் ஆன ஓ.எம்.ஆர்., சாலை

திருப்போரூர் : திருப்போரூர் ஒன்றியத்தில், நேற்று முன்தினம் இரவு முதலே கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மீண்டும் கனமழை பெய்யத் துவங்கியது.தண்டலம், திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலையில் மழைநீர் தேங்கி, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள சிறுபாலம் குறுகியதாக உள்ளதால், மழைநீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டது.இதனால், சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் பயணித்தனர். அதேபோல், தண்டலம் அண்ணா நகருக்கு பிரிந்து செல்லும் சாலையின் குறுக்கே, சிறுபாலம் இல்லாததால் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது.கேளம்பாக்கத்தில், வீராணம் சாலை பிரிந்து செல்லும் பகுதியிலும் மழைநீர் தேங்கியது. படூர் ஓ.எம்.ஆர்., சாலையில், தனியார் மருத்துவமனை அருகே மழைநீர் தேங்கியுள்ளது.அதேபோல், செங்கண்மால் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் ஒரு பகுதியில் மழைநீர் தேங்கி வருகிறது. குடியிருப்பு நிர்வாகம் சார்பில், மோட்டார் வாயிலாக தண்ணீரை அப்புறப்படுத்தும் பணி நடக்கிறது. அங்கு வசிப்போர், தங்கள் பைக், கார் போன்ற வாகனங்களை, ஓ.எம்.ஆர்., சாலை ஓரத்தில் நிறுத்தியுள்ளனர்.நாவலுார், தாழம்பூர் உள்ளிட்ட பல இடங்களில், சாலை, குடியிருப்பு பகுதிகளின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி வருகிறது. ஒன்றிய, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகங்கள், அவற்றின் காட்டுப்பாட்டு பகுதிகளில் தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

raja
அக் 16, 2024 08:11

மூன்றாண்டு ஆட்சி....முச்சந்தியே சாட்சி.... விடியல் அரசு பெருமிதம்...


VENKATASUBRAMANIAN
அக் 16, 2024 07:53

இதுதான் திராவிட மாடல் அரசு


Kasimani Baskaran
அக் 16, 2024 05:28

சிஎம்டிஏ சிறப்பாக திட்டமிட்டு கடலுக்கு பக்கத்தில் கூட மழை நீர் வடிய வசதியில்லாமல் வைத்து செய்திருப்பது கண்டனத்துக்கு உரியது.


raja
அக் 16, 2024 04:36

மூன்றாண்டு ஆட்சி... சாட்சி.....முதல்வர் பெருமிதம் ...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை