மேலும் செய்திகள்
கூட்டுறவு திட்டங்கள் : கலெக்டர் ஆய்வு
21-Mar-2025
செங்கல்பட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில், நான்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு புதிய கட்டம் கட்டித்தர கோரிக்கை எழுந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம், மொறப்பாக்கம், நுகும்பல், முகுந்தகிரி, முருகம்பாக்கம் ஆகிய கிராமங்களில், தொடக்க வேளாண்மை கூட்டுற கடன் சங்கங்கள் உள்ளன. இந்த சங்கங்கள் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டத்தில் இயங்கி வருகின்றன. இதனால், புதிய கட்டடங்கள் கட்டித்தர வேண்டும் என, கலெக்டர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஆகியோரிடம், விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.கூட்றவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, நான்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கும் புதிய கட்டடம் தலா 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய, அரசு மற்றும் கூட்டுறவுத்துறைக்கு, பரிந்துரை செய்து கடிதம் அனுப்பி உள்ளனர்.
21-Mar-2025