உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு இடம் திருவொற்றியூரில் மீட்பு

ரூ.3 கோடி மதிப்புள்ள அரசு இடம் திருவொற்றியூரில் மீட்பு

திருவொற்றியூர்:திருவொற்றியூர் மண்டலம், 4வது வார்டு, ராமநாதபுரத்தில், 1.75 கோடி ரூபாய் செலவில், தரை மற்றும் முதல் தளத்துடன், 6,400 சதுர அடி அளவில், சமுதாயக்கூடம் கட்டப்பட உள்ளது. இதற்காக, ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சி இடத்தைமீட்கும் பணியில்,அதிகாரிகள் களம் இறங்கினர்.அதன்படி, மாநகராட்சி அதிகாரிகள், ஜே.சி.பி., இயந்திரம், லாரிகள் உதவியுடன், ஆக்கிரமிப்பை அகற்றும் பணியில், நேற்று காலை ஈடுபட்டனர்.இதில், மாநகராட்சிக்கு சொந்தமான, ஒரு கிரவுண்ட் நிலத்தில் கட்டப் பட்டிருந்த, ஆறு கடைகளுக்கு, முறையாக 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டது. மீட்கப்பட்ட மாநகராட்சி இடத்தின் மதிப்பு, 3 கோடிரூபாய். விரைவில்,சமுதாயக் கூட கட்டுமான பணிகள் துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ