மேலும் செய்திகள்
புழல் ஜெயிலரை தாக்கிய பயங்கரவாத கைதிகள்
12-Jan-2025
புழல், ஹிந்து முன்னணி பிரமுகர்கள் கொலை வழக்கு, கோவை வெடிகுண்டு வழக்கு என, பல்வேறு வழக்குகளில் தொடர் புடைய பயங்கரவாத கைதிகள் புழல் மத்திய சிறையில் உயர் பாதுகாப்பு பிரிவில் அடைக்கப்பட்டுள்ளனர்.பயங்கரவாத கைதிகளான பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ருதீன் உள்ளிட்டோர், சோதனையின் போது சிறை போலீசாரிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.இந்த நிலையில், பிலால் மாலிக் மற்றும் பன்னா இஸ்மாயில் ஆகியோரது குடும்பத்தினர், இருவரையும் சந்திக்க வேண்டும் என, நேற்று புழல் சிறைக்கு வந்தனர். ஆனால், சிறைத்துறை சார்பில் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், சிறைவாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுனர்.இது குறித்து பிலால் மாலிக்கின் தாய் மும்தாஜ் பேகம் கூறுகையில், ''பிலால் மாலிக் தவறு செய்தால் ஆண்டவன் தண்டனை கொடுப்பான், போலீஸ் அடிக்கக் கூடாது. மகன் இருக்கிறானா, இல்லையா என தெரியவில்லை. அவனை பார்க்க வேண்டும்,'' என்றார்.பன்னா இஸ்மாயில் மனைவி சமீம் பானு கூறுகையில், ''பொய் வழக்கில் என் கணவர் 12 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறைக்கூடமா, சித்ரவதை கூடமா எனத் தெரியவில்லை. உறவினர் மட்டுமின்றி, வழக்கறிஞர் கூட சந்திக்க அனுமதி மறுக்கப்படுகிறது. உயிருடன் உள்ளார்களா இல்லையா என தெரியவில்லை. அவரை கண்ணால் பார்க்க வேண்டும் இதுகுறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார். அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், 'சிறையில் காவலர்களை தாக்கி தகராறில் ஈடுபடும் சிறை கைதிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மூன்று மாதங்கள் ரத்து செய்யப்படும். சிறை விதிகளின்படி, தற்போது உறவினர்களை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது' என்றனர்.
12-Jan-2025