மேலும் செய்திகள்
பிடே ரேட்டிங் ஓபன் செஸ் 352 வீரர்கள் பலப்பரீட்சை
1 minutes ago
பட்டம் வினாடி - வினா போட்டி
3 minutes ago
இன்று இனிதாக (நாள்/28/11/2025/வெள்ளி)
6 minutes ago
திருப்போரூர்: திருப்போரூர் - கேளம்பாக்கம் சாலையோரத்தில் குவிந்துள்ள மண்ணை அகற்றும் பணியில், நெடுஞ்சாலைத் துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் - கேளம்பாக்கம் இடையே உள்ள ஓ.எம்.ஆர்., எனும் பழைய மாமல்லபுரம் சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் காலவாக்கம், செங்கண்மால் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலையோரங்களில், அதிக அளவில் மண் குவிந்துள்ளது. இதனால், கண்களில் மண் துகள் பட்டு, இவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இந்நிலையில், கோவளம் முகத்துவாரத்தில் புதிய நீர்த்தேக்கம் அமைக்க அடிக்கல் நாட்டவும், திருப்போரூர் அடுத்த இள்ளலுாரில் சென்னை ஒண்டர்லா என்ற பொழுதுபோக்கு மையத்தை திறந்து வைக்கவும், முதல்வர் ஸ்டாலின், டிச., 1ல் மேற்கண்ட சாலை வழியாக வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், திருப்போரூர்பிரிவு நெடுஞ்சாலைத் துறை சார்பில், சாலை பணியாளர்கள் இணைந்து, சாலையோரம் குவிந்துள்ள மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், சாலையோரம் உள்ள முட்செடிகளை அகற்றும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
1 minutes ago
3 minutes ago
6 minutes ago