உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செய்யூர் அரசு மருத்துவமனையில் பழைய கட்டடங்கள் அகற்றம்

செய்யூர் அரசு மருத்துவமனையில் பழைய கட்டடங்கள் அகற்றம்

செய்யூர்:செய்யூர் பஜார் வீதியில், அரசு பொது மருத்துவமனை உள்ளது.தண்ணீர் பந்தல், சித்தாற்காடு, புத்துார், அம்மனுார், கீழச்சேரி என, 30க்கும் மேற்பட்ட கிராம மக்களின் பிரதான அரசு மருத்துவமனையாக உள்ளது.புறநோயாளிகள், மகப்பேறு மற்றும் அவசர சிகிச்சை என, தினசரி நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.மருத்துவமனையில் பல கட்டடங்கள், 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. இவை நாளடைவில் பழுதடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தன.இதனால், பழைய கட்டடங்களை அகற்றி மேம்படுத்தப்பட்ட புதிய மருத்துவமனை கட்டடம் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.இந்நிலையில் 3.2 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித் துறை வாயிலாக, பழைய கட்டடங்களை அகற்றி, புதிய மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை கட்டடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தனியார் நிறுவனத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.இதையடுத்து, மருத்துவமனை வளாகத்தில் இருந்த பழைய கட்டடங்கள்,'பொக்லைன்' இயந்திரம் வாயிலாக இடித்து அகற்றும் பணி நடந்து வருகிறது.இந்த பணி முடிந்தவுடன், அடுத்த சில நாட்களில் புதிய கட்டடம் அமைப்பதற்கான, பூமி பூஜை நடக்க உள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி